ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68 வது படம் உருவாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில் லியோ படம் வெளியாக இருந்ததால் தளபதி 68 படம் குறித்து அப்டேட்களை வெளியிடாமல் அமைதி காத்தது ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம்.
லியோ படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம்.
தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை இன்று (அக்டோபர் 24) படக்குழு வெளியிட்டுள்ளது. தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ள நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு, அஜ்மல், விடிவி கணேஷ், நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பட பூஜை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
தளபதி 68 பூஜை நிகழ்ச்சிக்கு ரெட் கலர் டீ ஷர்ட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் விஜய். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
On this auspicious day #Thalapathy68 @actorvijay Sir's #PadaPoojai video is here#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @actress_Sneha #Laila @meenakshiioffl @iYogiBabu #AGS25 pic.twitter.com/85ROtXein1
— AGS Entertainment (@Ags_production) October 24, 2023
ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 25வது படம் என்பதாலும், நடிகர் விஜய் – இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதாலும் தளபதி 68 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு “மங்காத்தா” போல் மீண்டும் ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுப்பார் என்று நம்புவோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நடிக்கும் ’அரிசி’!
ஆம்னி பேருந்துகள் இயங்காதா?: அரசு நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்!