நடிகர் விஜய்யின் கட்சிக்கு ஆதரவா? : பதறிய ஜெயம் ரவியின் பளீர் பதில்!

Published On:

| By christopher

Vijay's party support Jayam Ravi's clear answer

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று (பிப்ரவரி 16) வெளியாகியுள்ள திரைப்படம் சைரன். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை வழக்கத்திற்கு மாறாக நடிகர் ஜெயம் ரவி மதுரையில் உள்ள சினிப்ரியா தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ”ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மதுரைக்கு வந்தேன். மதுரை ரசிகர்கள் உடன் சேர்ந்து படம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்கள் கைதட்டி மகிழ்வதை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது இயக்குனர் ஆண்டனி பாக்யராஜின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. சைரன் படத்திற்கு அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிக திருப்தியான உணர்வை அளிக்கிறது” என கூறினார்.

தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தெரிவிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் பதறிய ஜெயம் ரவி, ”என்னுடைய வட்டம் குறுகியது. சினிமா மட்டும் தான். விஜய் அண்ணன் அழைப்பு விடுத்தால் வீட்டுக்கு வேண்டுமென்றால் சென்று வரலாம். அரசியல் பயணத்திற்காக திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தால், அவரின் இடத்தை பூர்த்தி செய்ய யாராலும் முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

INDvsENG : டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்

செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel