ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் மாஸ்டர்..! எங்கு தெரியுமா?

சினிமா

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர், லியோ ஆகிய இரு திரைப்படங்களும் மெகா பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தது. ஆனால் இன்றுவரை மாஸ்டர் படம் தான் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக உள்ளது.

2020 ஆம் ஆண்டு வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணத்தினால் 2021 ஆம் ஆண்டு தான் வெளியானது.

விஜய்யின் JD கதாபாத்திரம், விஜய் சேதுபதியின் நக்கலான வில்லத்தனம், அனிருத்தின் அல்டிமேட் ஆன மியூசிக் என இவை அனைத்துமே இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

USA, Canada, Australia போன்ற வெளிநாடுகளிலும் மாஸ்டர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா தொற்று காரணமாக UK- வில் மட்டும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகவில்லை.

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் UK திரையரங்குகளில் தற்போது வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை Hamsini Entertainment என்ற நிறுவனம் தான் கைப்பற்றி இருந்தது. இந்த படத்தை முதன்முறையாக UK வில் திரையிட போவதாக Hamsini Entertainment நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூன் மாதம் மாஸ்டர் படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் கில்லி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த நிலையில், அடுத்ததாக UK பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : சென்னை ஐசிஎஃப் ஆலையில் பணி!

ஹெல்த் டிப்ஸ்: ஸ்வீட் பிரியரே… ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம் தெரியுமா?

சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்: என்ன காரணம்?

ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி : என்ன ஆச்சு?

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *