தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று (அக்டோபர் 24) வெளியாகி உள்ளது.
வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தில் ராஜ் தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.
வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தீபாவளிக்கு வாரிசு திரைப்படத்திலிருந்து பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாரிசு திரைப்படம் குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் இருந்தனர்.
இந்தநிலையில், இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என்ற வாசகத்துடன் தளபதி விஜய் ஆக்ஷன் காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாடல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் கிடைத்துள்ளது.
செல்வம்