மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாட்களாகவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் எல்.வி.பிரசாத் சாலையில் உள்ள தனது வீட்டில் மனோபாலா இன்று (மே 3) மரணமடைந்தார்.
இதனையடுத்து அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைத்துறையினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனோபாலா உடலுக்கு நாளை காலை 10 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ள நிலையில் தற்போது திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் டைரக்டர் மனோபாலாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அங்கிருந்த அவரது அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயுடன் ஏற்கெனவே நண்பன், தலைவா, துப்பாக்கி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மனோபாலா, கடைசியாக ’லியோ’விலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
சினிமா, டிவி, யூடியூப்: மாஸ் மீடியாவில் மாஸ் காட்டிய மனோபாலா
புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக கையேந்தும் போராட்டம்!