வாரிசு படம்: மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

சினிமா

’வாரிசு’ படத்தால் விஜய் ரசிகர்கள் இப்போதே அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம், ‘வாரிசு’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்துடன் அஜித் நடிக்கும் ’துணிவு’ பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. ’வாரிசு’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

இந்த நிலையில், ‘வாரிசு’ படம் தொடர்பான சுவாரசியத் தகவலை நடன இயக்குநர் ஜானி இன்று (அக்டோபர் 14) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ”தளபதி விஜய் ரசிகர்களே, என் வார்த்தைகளை குறிச்சு வச்சுக்கோங்க. தளபதி விஜய்யின் மாஸான நடனத்தைக் காண தயாராகுங்கள். எவரும் திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கப்போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடல் நடன ஒத்திகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’வெகுநாட்களாக காத்திருந்து .. இன்று நான் கண்ட கனவு நிறைவேறியது.

என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இறைவனுக்கும் என் அன்னைக்கும் நன்றி’ என பதிவிட்டிருந்தார். இந்த இருவருடைய ட்விட்டர் பதிவுகளாலும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

சஞ்சீவன் படம் எப்படி?

சீரியல் நடிகர் அர்ணவ் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.