தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்டோர் இன்று (ஆகஸ்ட் 19) அவரது வீட்டில் சந்தித்தனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோட்’ படத்தில் விஜய் நடித்துள்ளார். பிரபு தேவா, சினேகா, பிரசாந்த், மோகன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ‘கோட்’ திரைப்படம் வெளியாகிறது. இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பியிருந்த டிரெய்லர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில் தான் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு விஜய், வெங்கட்பிரபு, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் இன்று மாலை சென்றனர்.
அங்கு பிரேமலதாவை சந்தித்து ‘கோட்’ படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பானது சுமார் அரை மணி நேரம் நடைபெற்றுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில், வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த இருக்கிறார்.
இந்த மாநாட்டின் போது விஜய் கட்சியின் கொடி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்தசூழலில், நடிகர் விஜய் பிரேமலதாவை சந்தித்து பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பான விவாதித்திற்குள்ளாகியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வினேஷ் போகத்துக்கு தங்கப்பதக்கம்… வழங்கியது யார் தெரியுமா?
ஆம்ஸ்ட்ராங் கொலை… ஆற்காடு சுரேஷின் மனைவி கைது!