இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68.
இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தங்களது 25 வது படமாக தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் வெங்கட் பிரபுவின் பாய்ஸ் கேங் உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய்யின் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாய்லாந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு நவம்பர் 13ஆம் தேதி தான் நடிகர் விஜய் சென்னை திரும்பினார்.
ஆனால் அதற்குள் தளபதி 68 படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவத் தொடங்கியது.
2012 ஆம் ஆண்டு வெளியான “லூப்பர்” படத்தின் ரீமேக் தான் தளபதி 68 படம் என்று பலரும் சமூக வலைதளங்களில் பகிர தொடங்கினர்.
தளபதி 68 படமும் Sci-Fi கதைக்களத்தில் உருவாகிறது என்று சொல்லப்படுவதால் ஒருவேளை லூப்பர் படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு வேடத்தில் நடிகர் விஜய் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
“அழகிய தமிழ் மகன்” படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் விஜய் ஒரு நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக வெளியாகி உள்ள இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
நாளை முதல் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள்!
ODI தரவரிசை: டாப் 5க்குள் நுழைந்த ரோகித் சர்மா… இந்தியா ஆதிக்கம்!