actor vijay flies to thailand

‘தளபதி 68’: தாய்லாந்து சென்ற விஜய்

சினிமா

லியோ படம் வெளியாகி 540 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து விஜய்யின் கேரியரிலேயே மிகப்பெரும் வெற்றியை பெற்று தந்துள்ளது. லியோவின் வெற்றியை கொண்டாடும் வகையில் நவம்பர் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வேகமெடுத்துள்ளது.

லியோ படம் வெளியான ஒரே வாரத்தில் தளபதி 68 படத்தின் பூஜை நிகழ்ச்சி வீடியோவை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டது.

தளபதி 68 படத்தில் விஜய் உடன் நடிகர்கள் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, சினேகா, லைலா, ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ் மற்றும் வெங்கட் பிரபுவின் பாய்ஸ் கேங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து ஏற்கனவே தளபதி 68 படத்தின் ஓர் பாடல் காட்சியும், சண்டை காட்சியும் படமாக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியானது. மேலும் அடுத்தகட்ட பட்பிடிப்பிற்காக இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிற பட குழுவினர் தாய்லாந்து சென்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தளபதி 68 படப்பிடிப்பில் கலந்து கொள்ள தாய்லாந்துக்கு புறப்பட்டுவிட்டார். சென்னை விமான நிலையத்தில் விஜய் பிளைட் ஏற சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

அண்ணாமலையின் இலங்கை விசிட்: பின்னணியில் நீலகிரி தேர்தல்!

எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு : அமைச்சர்கள் பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *