தன்னை பார்க்க அடம்பிடித்த பெண் குழந்தையிடம் நடிகர் விஜய் பேசி மகிழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகம் கடந்து இன்று இந்திய திரையுலகிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் விஜய்.
கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த வாரிசு படத்தினைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ள விஜய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவராலும் விரும்பப்படும் நடிகராக உள்ளார்.
ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைதளங்கள் ஆக்கிரமித்து இருக்கும் இன்றைய காலத்தில் விஜய் பாடல்களுக்கு ஆடுவது, அவர் பேசிய வசனங்களை பேசுவது என பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ரீல்ஸ் செய்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று தன் அம்மாவிடம் “விஜய் அங்கிளை வர சொல்லு” என்று அடம்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
அப்போது காஷ்மீரில் லியோ பட ஷூட்டிங்கில் இருந்தார் விஜய். சமீபத்தில் அங்கு படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதை ஒட்டி தற்போது தனது நீலாங்கரை வீட்டில் ஓய்வில் உள்ளார்.
இதற்கிடையே தன்னை பார்க்க வேண்டும் என்று ஒரு குழந்தை அடம்பிடித்ததை கேள்விப்பட்டு அவரிடம் இன்று (மார்ச் 31) வீடியோ காலில் பேசி ஆச்சரியமளித்துள்ளார் விஜய்.
குழந்தையிடம் பாசமுடன் விஜய் பேசும் வீடியோவை விஜய் மக்கள் இயக்க தலைமை நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.
அந்த வீடியோவில், விஜய் குழந்தையிடம் பெயர் கேட்க, பபிதா பேகம் என்கிறது. பின்னர் ”நீங்க ரொம்ப க்யூட்டா, அழகா இருக்கீங்க” என்றார். அதற்கு அந்த குழந்தையும் ’நீங்களும் ரொம்ப க்யூட்டா இருக்கீங்க’ என கொஞ்சியபடி சொல்ல, உடனே விஜய்யும் க்யூட் ரியாக்ஷன் கொடுக்கிறார்.
பின்னர் ஏன் முடி வெட்டிடீங்க? என்று விஜய் கேட்டதற்கு ’வெயிலுக்காக வெட்டிவிட்டோம்’ என்கின்றனர் பபிதாவின் பெற்றோர்கள்.
மேலும் குழந்தையிடம் ’சாப்டீங்களா’? என்று விஜய் கேட்க, ’தோசை சாப்பிட்டேன். நீங்கள் சாப்டீங்களா அங்கிள்?’ என குழந்தை கேட்டது.
தொடர்ந்து அவரது பெற்றோரிடம் பேசி நலம் விசாரித்த நடிகர் விஜய், அனைவரையும் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.
கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில், தன்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சின்னஞ்சிறு குழந்தையுடன் விஜய் பாசமுடன் பேசி மகிழ்ந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: 4 ஆசிரியர்கள் மீது 100 மாணவிகள் புகார்!
பள்ளிக்கல்வி துறைக்கு புதிய 26 அறிவிப்புகள்!