கோட் படத்தில் ஒரு கார் வருது… அதுல ஒரு பேரு வருது!

சினிமா

நடிகர் விஜய் தளபதி 69 படத்துக்கு பிறகு, தீவிர அரசியலில் ஈடுபட போகிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் தொடங்கியுள்ளார். கட்சிக் கொடி, கொள்கை விளக்க பாடல்கள் அனைத்தும் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அரசியலில் தீவிர பாய்ச்சலில் ஈடுபட விஜய் முற்றிலுமாக தன்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு செப்டம்பர் 22-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் பெயரில் கட்சி தொடங்கியுள்ளதாக தகவல் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் லட்சக்கணக்கான விஜய்யின் ரசிகர்கள் பங்கேற்பார்கள். அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தலை கடும் போட்டிக் களமாக மாற்ற  இந்த மாநாடு வித்திடலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோட் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசியல் கட்சி தலைவராக விஜய்யின் முதல் படம் என்பதால் காட்சிகளில் அரசியல் தாக்கம்  இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்தது போலவே, நடிகர் விஜய் தனது ரசிகர்களை ஏமாற்றவில்லை.

தி கோட் படத்தில் TN 07 CM 2026 என்ற எண் கொண்ட காரை படம் முழுக்க விஜய் ஓட்டி வருகிறார். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், TN 07 CM 2026 என்ற கார் நம்பர் மூலம் விஜய் தனது ரசிகர்களுக்கு சூசகமாக பல தகவல்களை கூறியுள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

நந்தன் பட இயக்குநரின் கையை கண்ணீருடன் பற்றிய சூரி… நள்ளிரவில் என்ன நடந்தது?

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்: மோடி அறிவிப்பு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *