விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ அப்டேட்!

சினிமா

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ’பீஸ்ட்’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து வம்சி  இயக்கும் ‘வாரிசு’ படத்தில் விஜய்  நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இந்த படத்தில்  பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு படத்திற்கு அடுத்து விஜய் – லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்  வெற்றிக்கூட்டணி ‘விஜய் 67’ படத்தில் இணைகின்றனர்.

Thalapathy 67 Shooting Starts

இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் குமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளராக சேவியர் பிரிட்டோவும் இணைந்துள்ளார்.

விக்ரம் வெற்றியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேறிய  லோகேஷ் கனகராஜ் படத்திற்கான கதை உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த படத்தின் அறிவிப்புடன் விரைவில் சமூக வலைதளப்பக்கத்திற்கு வருவேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழுவினரிடம் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • க.சீனிவாசன்

தளபதி 67: விஜய்க்கு ஜோடி யார்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.