நடிகர் வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆலம்பனா. இந்த படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பட புரோமோஷனுக்காக நடிகர் வைபவ் சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தளபதி 68 குறித்து பேசினார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ”தளபதி 68 படத்தில் என்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்க வில்லை. தளபதி 68 படத்திற்காக நான் கெட்டப் மாற்ற வேண்டும்.
தளபதி 68 படத்தின் ஓபனிங் சாங் கேட்டேன், வேற லெவல், யுவன் ஷங்கர் ராஜா இசை செம சூப்பராக இருக்கும். வெங்கட் பிரபுவிடம் தளபதி 68 படத்தின் முழு கதையையும் நான் இன்னும் கேட்கவில்லை. ஆனால் நிச்சயம் தளபதி 68 பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும்” என்று வைபவ் தெரிவித்துள்ளார்.
தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். நடிகர்கள் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி 68 படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
’லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம்: ஷாக் கொடுத்த நயன்தாரா