வடிவேலு வீட்டில் திடீர் சோகம்!

சினிமா

வயது முதிர்வு காரணமாக நடிகர் வடிவேலுவின் தாயார் நேற்று (ஜனவரி 18) இரவு காலமானார்.

1988-ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வடிவேலு. தொடர்ந்து ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், பிரண்ட்ஸ், தவசி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார். தனது தனித்துவமான நடிப்பாலும், நகைச்சுவை திறனாலும் தமிழ் சினிமா ரசிகர்களால் வைகைப்புயல் என்று அழைக்கப்பட்டார்.

சில காலம் நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு, சமீபத்தில் வெளியான நாய் சேகர் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

இந்தநிலையில், நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி என்ற பாப்பா நேற்று இரவு வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 87. தாயாரின் மறைவால் வடிவேலு குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது இறுதிச் சடங்கு மதுரை விரகனூரில் நடைபெற உள்ளது.

செல்வம்

சட்டம் ஒழுங்கு நிலவரம்: முதல்வர் ஆலோசனை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

1 thought on “வடிவேலு வீட்டில் திடீர் சோகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *