வடிவேலுவின் தம்பி காலமானார்!

சினிமா

நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் (52) உடல் நலக்குறைவால் இன்று (ஆகஸ்ட் 28) உயிரிழந்தார்.

நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தில் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் நடித்திருந்தார். மொத்தம் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்த இவர் தொடர்ந்து நடிக்காமல் ஜவுளி வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வடிவேலுவின் சகோதரர் கடந்த சில நாட்களாக கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

நடிகர் வடிவேலுவின் தாயார் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரரும் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் வடிவேலுவின் தம்பி இழப்புக்கு திரை உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோனிஷா

“சீமானை கைது செய்ய வேண்டும்” – நடிகை விஜயலட்சுமி

2 நாட்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *