கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்த த்ரிஷாவுக்கு அரசியல் ஆசை வந்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் கலக்கி வருபவர்.
வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி முத்திரை பதித்துள்ள த்ரிஷாவிற்கு வயது 40-ஐ நெருங்கினாலும் இளமை குறையாமல் அதே அழகுடன் இருக்கிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு..
தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதைத்தவிர மேலும் இவர் கைவசம் தமிழில் ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை2 போன்ற படங்களும், மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் எனும் படம், தெலுங்கில் பிருந்தா என்கிற வெப்தொடர் என மூன்று மொழிகளிலும் படுபிசியாக நடித்து வருகிறார் த்ரிஷா.
மேலும் நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு அடுத்த படியாக தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்த த்ரிஷாவுக்கு சினிமாவை போலவே அரசியலிலும் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என ஆசை வந்துள்ளதாம்.
இதனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்க இருக்கிறாராம்.
விரைவில் இது குறித்து அறிவிப்புகளும் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்துள்ளன.
க.சீனிவாசன்
கவனம் ஈர்க்கும் த்ரிஷா ஐஸ்வர்யா ராய்: பொன்னியின் செல்வன் டீசர்!
தப்பான கட்சியை சொல்றீங்க. இப்போல்லாம் பிஜேபில சேர்றதுனே பேஷன்.