Actor Surya Thank to CM Stalin

2 Years of ’Jai Bhim’: முதல்வருக்கு நன்றி கூறிய சூர்யா

சினிமா

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘ஜெய் பீம்’.

இந்த படத்தில் நடிகர்கள் லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன், குருசோமசுந்தரம்  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜெய் பீம் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இருளர் சமூக மக்கள் மீதான போலீசாரின் அதிகார அத்துமீறல் குறித்து மனதை உருக்கும் காட்சிகள் மூலமாக உலகிற்கு எடுத்து சொன்னது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Actor Surya Thank to CM Stalin

தற்போது ஜெய் பீம் படம் வெளியாகி நேற்றோடு (நவம்பர் 2) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் ஜெய் பீம் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் ஜெய் பீம் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன.

மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவின் பதிவை பகிர்ந்த இயக்குனர் ஞானவேல்,

“உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம்… கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி கரம்”,என்ற ஜெய் பீம் படத்தில் வரும் “மண்ணிலே ஈரமுண்டு” பாடல் வரிகளை பதிவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

ஹெல்த் டிப்ஸ்: அக்குள் வியர்வை நாற்றத்தை போக்க இயற்கை வைத்தியம் இதோ!

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *