இறுதி சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு அந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை சுதா இயக்கியுள்ளார். ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா 43 படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டது. சூர்யா 43 படத்தின் டைட்டிலில் புறநானூறு என்ற வார்த்தை மட்டும் டைட்டில் அறிவிப்பு வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்கிறார். நடிகர் துல்கர் சல்மான், நடிகர் விஜய் வர்மா மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. சூர்யா 43 படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூர்யா 43 படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற உள்ளதாகவும், இந்த படத்தின் கதை 80ஸ் காலகட்டத்தில் நடப்பது போல படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராடும் இளைஞராக நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
போலி சுங்கச்சாவடி அமைத்து ரூ.75 கோடி வசூல்… 5 பேர் மீது பாய்ந்தது வழக்கு!