மருந்துவாங்க கூட காசு இல்ல…வீடியோ வெளியிட்ட தயாரிப்பாளர்…ஓடி வந்து உதவிய சூர்யா

சினிமா

மருந்து வாங்க கூட பணம் இல்லை என்று வீடியோ வெளியிட்ட தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு நடிகர் சூர்யா உதவி செய்துள்ளார்.

தயாரிப்பாளர் வி.ஏ.துரை திரைப்படத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது சர்க்கரை நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் .

தமிழ் சினிமாவில், என்னம்மா கண்ணு, பிதாமகன் ,லவ்லி, விவரமான ஆளு, லூட்டி, பாபா, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. எவர்கிரின் மூவிஸ் என்ற பெயரில் தனி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வந்தார்.

இந்நிலையில், தான் மிகுந்த சிரமத்தில் இருப்பதாகவும் யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோ பதிவில், “ நான் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதனால் காலில் உள்ளே எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டு இருக்கிறது. கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் உள்ளது.

என்னை கவனித்துக் கொள்ள ஆளில்லாத பரிதாபமான நிலைமையில் இருக்கிறேன். மருந்து வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் தவித்து வருகிறேன். அதனால் யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் “ என்றார்.

இவரின் சூழ்நிலையை அறிந்த சூர்யா உடனே மருத்துவ செலவுக்காக ரூபாய் 2 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். இதனிடையே ரசிகர்கள் பலரும் சூர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி: விவசாயி கைது!

வதந்தி கிளப்பிய உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

+1
1
+1
0
+1
1
+1
5
+1
1
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *