குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் கிச்சா சுதீப்

சினிமா

தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 வயதுக் குழந்தை சாக்‌ஷியை நேரில் சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார் கன்னட நடிகர் கிச்சா சுதீப். 

இந்தியத் திரைத்துறையில் பிரபலமாக விளங்கும் நடிகர் சுதீப், ஒரு இந்திய நடிகர், இயக்குநர் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் பாடகர் எனப் பன்முகம் கொண்டவர்.

கிச்சா சுதீப்  கன்னட சினிமாவில்  அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் மற்றும் 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் முதல் 100 பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் கன்னட நடிகர்களில் ஒருவராவார்.

மூன்றாம் வகுப்பு படிக்கும், 9 வயது நிரம்பிய சாக்‌ஷி, மெட்டாஸ்டேடிக் அல்லாத ஆஸ்டியோசர்கோமா எனும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுபெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள ஸ்ரீ சங்கரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் நடிகர் சுதீப்பின் தீவிர ரசிகர்.  அவரிடம்  ஏன் சுதீப்பை சந்திக்க ஆசை என்று கேட்ட போது… “அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்,  என்றவர்”.

கன்னடப் படமான ‘ராணா’ படத்தில்  வரும் திதிலி பாடல் என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் அவரை நேரில் சந்திக்க வேண்டுமென்பது எனது கனவு என்றார். சிறுமியின் ஆசையைப் பற்றி அறிந்த நடிகர் சுதீப், குழந்தையை நேரில் சந்தித்து உரையாடி, அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். 

தனது கனவு நாயகன் சுதீப் அவர்களை நேரில் சந்தித்ததில் குழந்தை சாக்‌ஷி உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் உள்ளார்.

இராமானுஜம்

அஞ்சல் துறை: நேரடி முகவர்கள், கள அலுவலர்களுக்கு நேர்காணல்! 

டிரையம்ப் நிறுவனத்தின் புதிய பைக்குகள் அறிமுகம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *