சிறுவர்களுக்கு கேரவனை சுற்றி காட்டிய சூரி..! வைரல் வீடியோ.!

சினிமா

சினிமா துறையில் பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் கேரவன்களை பயன்படுத்துவது வழக்கம். நடிகர்களுக்கு மேக்கப் போட, அவர்கள் ஓய்வெடுக்க, அவர்களை சந்திக்க வருபவர்களை உபசரிக்க என அனைத்திற்கும் ஏற்றவாறு சகல வசதிகளுடன் கேரவன்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

இந்நிலையில் ஓர் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் சூரி சிறுவர்களை தன் கேரவனை சுற்றி பார்க்க உள்ளே அனுமதித்தது தற்போது சமூக வலைத்தளத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான நடிகர் சூரி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடித்து, தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார். விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தற்போது சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சசிகுமாரும், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் பிஸியாக இருந்த நடிகர் சூரியிடம் படப்பிடிப்பை பார்க்க வந்த சிறுவர்கள் அவர் கேரவனை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசையுடன் கேட்டனர்.

“கேரவனுக்குள் என்ன இருக்கிறது அதை ஏன் சுற்றி பார்க்க வேண்டும்” என்று நடிகர் சூரி சிறுவர்களிடம் கேட்டவுடன், கூட்டத்திலிருந்து சிறுவன் ஒருவன் “அதனுள் பாத்ரூம் இருக்கு” என கூற, அதைக் கேட்டவுடன் நடிகர் சூரி சிரித்தபடியே, “அது பாத்ரூம் இல்லை அது மேக்கப் போடும் அறை… ஒவ்வொருத்தராக உள்ளே வந்து சுற்றிப் பாருங்கள்” என்று கூறி சிறுவர்களை கேரவனுக்குள் அனுமதித்தார்.

அதெற்கெல்லாம் மேலாக கேரவனை சுற்றிபார்த்துவிட்டு வெளியேறிய சிறுவர்களிடம், ’நல்லா படிக்கனும்டா’ என்று சூரி அக்கறையுடன் கூறுவது வீடியோ பார்க்கும் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

நடிகர் சூரி சிறுவர்களை தன் கேரவனுக்குள் அனுமதித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகர் சூரியை பாராட்டி வருகின்றனர்.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Asian Games 2023: விளையாடாமலே கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட்: சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *