சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில், மண்டேலா படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கும் ’மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கரும், முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
மாவீரன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விரைவில் இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில்,இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 34 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளது.சிவகார்த்திகேயன் திரைப்படம் ஒன்றின் ஓடிடி உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகி இருப்பது இதுதான் முதல் முறை.
விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் 1986ல் வெளியான மாவீரன் படத்தின் டைட்டிலில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே’ : எஸ்பிபி பற்றிய சுவாரசியம்!
“உதயகுமார் எப்படி அமைச்சராக இருந்தார்?” பிடிஆர் காட்டம்!