மலையாள இயக்குனருடன் மெகா பட்ஜெட் படத்தில் இணையும் சிம்பு?

சினிமா

மிக நீண்ட இடைவேளைக்கு பின், மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து ஹிட் படங்களுடன், சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு, தற்போது ஒவ்வொரு கதையையும் மிக நேர்தியாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில், மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் தயாராகிவரும் ‘தக் லைஃப்’ படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து, துல்கர் சல்மான், ரிது வர்மா நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த ‘STR 48’ திரைப்படம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை கதையாக கொண்டு, ஒரு ஆக்சன் ட்ராமா திரைப்படமாக தயாராக உள்ள நிலையில், அப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

அண்மையில், இப்படத்தை தயாரிப்பதில் இருந்து, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு நிறுவனத்தின் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

இந்நிலையில், இப்படங்களை தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்காக பிரபல மலையாள இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப்புடன் சிம்பு இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமடைந்த ஜூட் அந்தனி ஜோசப், 2018, ஓம் சாந்தி ஓசானா, சாரா’ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். மேலும், பிரேமம் துவங்கி, லவ் ஆக்சன் ட்ராமா, மின்னல் முரளி என பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்த படத்தை மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படமாக தயாரிக்க, தில் ராஜூ, ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ன்மென்ட் உள்ளிட்ட தயாரிப்பாளருடன் நடிகர் சிம்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அட்டகாசமான அம்சங்களுடன் ‘Redmi 13 5G’: விலை இவ்வளவு தானா?

விக்கிரவாண்டி தேர்தல்: முதல் ஆளாக வாக்களித்த அன்னியூர் சிவா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *