மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர் வெற்றி படங்களை கொடுத்த நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக STR 48 படத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தை கமல் ஹாசன் அவர்கள் தயாரிக்க, “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி STR 48 படத்தை இயக்குவார் என்று அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் திடீரென இயக்குநர் மணிரத்னம் – கமல் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
கடந்த மே மாதம் டெல்லியில் தக் லைஃப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து சிம்பு, அபிராமி, நாசர் உள்ளிட்ட சில நடிகர்கள் அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கான அறிமுக வீடியோவை படக் குழு வெளியிட்டது.
தற்போது சென்னையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், தக் லைஃப் படக் குழுவினருக்கு நடிகர் சிம்பு பிரியாணி பார்ட்டி வைத்துள்ளார்.
மேலும் படக்குழுவினருக்கு தன் கையாலேயே அவர் பிரியாணி பரிமாறிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://x.com/CinemaWithAB/status/1797978545274360104
இது மட்டுமின்றி, ஓ மை கடவுளே படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் பிறந்தநாளை பற்றி அறிந்த சிம்பு, அஸ்வத் மாரிமுத்துவுக்கும் அவரது நண்பர்களுக்கும் பிரியாணி அனுப்பி வைத்தார் என்று அஸ்வத் அவர்களே தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.
நடிகர் சிம்புவின் இந்த செயலைக் கண்டு ரசிகர்கள் அவரை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
மேலும் இதே போல் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படக்குழுவினருக்கு பிரியாணி பார்ட்டி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?- கனிமொழி கேள்வி!
ஆந்திரா : 10 வருட போராட்டம்… காத்திருந்து அறுவடை செய்த பவன் கல்யாண்