“சித்தா” படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் சித்தார்த் நடித்துள்ள “இந்தியன் 2” திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் சித்தார்த்தின் 40 வது படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது.
இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இதற்கு முன் 8 தோட்டாக்கள், அதர்வாவின் குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சித்தார்த் 40 திரைப்படத்தை தயாரிக்கிறது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி பிரபல தயாரிப்பாளரான சஷிகாந்த் இயக்கியுள்ள “டெஸ்ட்” என்ற திரைப்படத்தில் நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாராவுடன் இணைந்து சித்தார்த் நடித்திருக்கிறார்.
Happy to release the first look of my dear brother #Siddharth‘s #MissYou.
Wishing the best to the entire team for huge success ????????@7Milesps @cvsam @Dir_RajasekarN @AshikaRanganath @GhibranVaibodha #Karunakaran @bala_actor #LollusabhaMaran @Sastika_R @kgvenkatesh_in @Dponnuraj… pic.twitter.com/NsadmBFbeV
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 6, 2024
இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் “மிஸ் யூ” என்ற படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். இவர் ஏற்கனவே அதர்வாவின் பட்டத்து அரசன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் மிஸ் யூ திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ இந்த படத்தை தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கான வசனங்களை அசோக் என்பவர் எழுதியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கே.ஜே. வெங்கடேஷ், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், கலை இயக்குநர் சிவசங்கர், நடன இயக்குநர் தினேஷ், ஆக்சன் இயக்குனர் தினேஷ் காசி, எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் சார்லஸ் செல்லம் ஆகியோர் இந்த படத்தில் பணி புரிந்துள்ளனர்.
மிஸ் யூ திரைப்படத்தின் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் மாதவன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு மிஸ் யூ படக் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மிஸ் யூ திரைப்படத்தின் போஸ்டரில் நடிகர் சித்தார்த் ஒரு bag- ஐ மாட்டிக் கொண்டு, செம ஸ்மார்ட்டாக போஸ் கொடுப்பதை பார்த்த ரசிகர்கள் நீண்ட நாள் கழித்து ஒரு சூப்பரான ஃபீல் குட் படத்தில் சித்தார்த் நடித்துள்ளார் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கூடிய விரைவில் இந்த படம் குறித்த மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வைரமுத்து பாடலில் பிழை… விழா மேடையில் போட்டுடைத்த விக்கிரமராஜா
‘நீட்டை ஒழிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை’ – ஸ்டாலின்
குவியும் முறைகேடு புகார் : நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் எடப்பாடி