நடிகர் ஷாருக்கான் இந்தி திரையுலகில் பாலிவுட் பாட்ஷா என கொண்டாடப்படுகிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.
தொடர் தோல்வியில் இருந்த இந்தி திரையுலகிற்கு நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் தரும் வகையில் இந்த இரண்டு படங்களும் 1000 கோடி ரூபாய்வசூலித்தது மட்டுமல்லாமல் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றன.
சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் ‘லோகார்னோ திரைப்பட விழா’ நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் கடந்த 11ஆம் தேதி நடந்த 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற பின்னர், மேடையில் நடிகர் ஷாருக்கான் பேசிய போது, ”லோகார்னோவில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களின் கூட்டத்தை பார்த்து கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்” என்று கூறினார்.
அங்கு நடைபெற்ற விழாவில் அவரது நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற தேவதாஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஷாருக்கான் உடனான ரசிகர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அப்போது, இந்திய சினிமாவின் பன்முக தன்மை, செழுமையை பற்றி பேசியவர், தென்னிந்திய சினிமாவிற்கும் இந்தி சினிமாவிற்கும் இடையே உள்ள நேர்மறையான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
தென்னிந்திய சினிமாவின் புத்திசாலித்தனத்தையும், அந்த மொழிகளில் இருந்து வெளிவரும் திரைப்படங்களில் பயன்படுத்தபடும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும் மற்றும் கதையின் சிறப்பையும் பற்றி சிலாகித்து பேசிய ஷாருக்கான், “சினிமா ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், தென்னிந்திய சினிமா மிகவும் அற்புதமானது”, என்று பாராட்டி உள்ளார்.
தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பன்மொழிகளில் வெளியான ஆர்ஆர்ஆர் மற்றும் பாகுபலி போன்ற சமீபத்திய பிளாக்பஸ்டர் படங்கள் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன, என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிட்ட பாணி உள்ளது, நான் அதை மிகவும் ரசித்தேன். அது எனக்கு ஒரு புதிய அனுபவமாகவும் இருந்தது” என்று பாராட்டி பேசியுள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கிரஹாம் தோர்ப் மரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்!
வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கடனை திருப்பி கேட்க மாட்டார்கள்… மகளை கொன்ற தாய்!
வேற லெவல் படம்… ‘டிமான்ட்டி காலனி 2’ பார்த்து மிரண்டுபோன விநியோகஸ்தர்!
‘கங்குவா’ டிரெய்லர்… ரசிகர்கள் ரியாக்ஷன் இதோ!