லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
‘தலைவர் 171’ என்று அழைக்கப்படும் இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனுக்கு ‘விக்ரம்’ என்ற மிகப் பெரிய வெற்றி திரைப்படத்தைக் கொடுத்த லோகேஷ், சூப்பர் ஸ்டாரை எவ்வாறு இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தற்பொழுது ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதம் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அதற்குள்ளாகவே தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கி உள்ளார் ரஜினி. அவரின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இதன் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ‘தளபதி’ படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த ஷோபனா இதில் ஹீரோயினாகவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்பொழுது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் தலைவர் 171-ல் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும், வில்லனாக சத்யராஜ் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் ஸ்ருதியை தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினிக்கு வில்லனாக, சத்யராஜ் நடிப்பதால் இப்படம் நல்ல வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீலகிரி: ராகுல் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை சோதனை!
Video: ஹீரோவாக அறிமுகம் ஆகும் KPY பாலா.. யாரும் எதிர்பாக்காத அறிவிப்பு..!!
மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்?