லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி ‘ திரைப்படத்தில் சத்யராஜ் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலிவுட்டில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகி வரும் ‘கூலி ‘ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
ஏற்கனவே இந்தப் படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என அறிவிப்புகள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தில் அவர் ‘ராஜசேகர் ‘ என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே இந்தப் படத்தின் அறிமுக டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும், படத்தின் முதல் சிங்கிள், டீசர் போன்ற அப்டேட்களை ரஜினியின் அடுத்த ரிலீஸான ‘ வேட்டையன் ‘ திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பின்னரே எதிர்பார்க்க முடியும் எனத் தெரிகிறது. இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை லண்டன் பயணம்… தமிழகம் அமைதியாக இருக்கிறது… கலாய்த்த ஆர்.பி.உதயகுமார்
கோட் படத்தில் நடிக்க விஜய்க்கு 200 கோடி சம்பளம்… அர்ச்சனா கல்பாத்தி சொல்லும் ரகசியம்!
இன்றைய OTT வெளியீடுகள்…கனா காணும் காலங்கள் முதல்….
குடித்து விட்டு அறை கதவை தட்டிய பிரபல தெலுங்கு நடிகர் … கதறிய விசித்ரா! கைவிட்ட சரத்குமார்