தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சரத் பாபு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்
நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு இன்று (மே22) காலமானார்.
72 வயதான நடிகர் சரத்பாபு தமிழில் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
நாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் ரஜினிகாந்த்துடன் நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இவரது மறைவு தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
விழுப்புரத்தில் டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பு!