நடிகர் சந்தானம் நடிக்கும் அடுத்த படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் சந்தானம்.
அந்த வகையில் அவர் நடிப்பில் ‘கிக்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்த உருவாகவிருக்கும் படத்தின் தலைப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்திற்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்று வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது கவுண்டமணி – செந்தில் புகழ்பெற்ற காமெடி காட்சியாகும்.
அதன்படி மீண்டும் டிக்கிலோனா இயக்குநர் கார்த்திக் யோகியுடன் இரண்டாவது முறையாகச் சந்தானம் கூட்டணி அமைத்துள்ளார்.
இந்த படத்தை பீப்பிள் பிலிம் பேக்டரி நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது.
மோனிஷா
பாஜக முக்கிய பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது!
2 மாணவியின் உயிரை பறித்த ’துணிவு’ திரைப்படம்!