நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
கன்னட இயக்குநர் பிரசாந்த ராஜ் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் “கிக்” திரைப்படம் உருவாகியுள்ளது. தாராள பிரபு படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
தம்பி ராமையா, கூல் சுரேஷ், பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி ஆகியோர் கிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஃபார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.
நடிகர் சந்தானத்தின் 42வது பிறந்தநாளான இன்று (ஜனவரி 21) அவரது நடிப்பில் உருவாகியுள்ள “கிக்” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
டிரெய்லர் தொடங்கும் போதே ”கால்ல ஈரம் படாம கடலக்கூட தாண்டிடலாம், ஆனா கண்ல ஈரம்படாம காதல தாண்ட முடியாது” என்ற வசனத்துடன் ஒரு ஆழமான காதல் கதை போல் உணர செய்கிறது.
ஆனால் இதை தொடர்ந்து சந்தானத்தின் அறிமுக காட்சிகள், கதாநாயகிக்கும், சந்தானத்திற்கும் இடையே வரும் உரையாடல்கள் ‘கிக்’ ஒரு காதல் கலந்த காமெடி படம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
டிரெய்லரில் முக்கியமாக, ”அவளுக்கு வரப் போற மாப்பிள்ளை பொய்யே பேசக்கூடாதாம், உனக்கு பொய் மட்டும் தானே பேச வரும். அடுத்தவங்கல ஏமாத்தவே கூடாதாம், உனக்கு அடுத்தவங்கள ஏமாத்துறது தானே வேலையே.
சரக்கு அடிக்கக் கூடாதாம், நீ லாக்டவுன் காலத்திலேயே பிளாக்ல வாங்கி சரக்கு அடிச்சவன்” என்று சந்தானத்திற்கும் தம்பி ராமய்யாவிற்கு இடையிலான உரையாடல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதுவே சந்தானத்தின் காதலுக்கு வரும் பிரச்சனைக்காகவும் அமைந்திருக்கும் என்பதைப் போல டிரெய்லர் காட்சிகள் உள்ளது. இப்படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மோனிஷா
அபாரமான பந்துவீச்சு… அதிரடியான பேட்டிங்: ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா