“மாரிமுத்து அருமையான மனிதர்”: ரஜினிகாந்த் இரங்கல்!

Published On:

| By Selvam

நடிகர் மாரிமுத்து மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று (செப்டம்பர் 8) இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மாரிமுத்து. குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து குடும்பங்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை நெஞ்சு வலி காரணமாக மாரிமுத்து உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

மாரிமுத்து மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி”

மாரிமுத்துவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் மாரிமுத்துவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செல்வம்

முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல்!

”மாரிமுத்து ஜாலியான மனிதர்… இதை ஏத்துக்கவே முடியல”: எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் வேதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share