சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 26ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “அப்பாவை சங்கின்னு சிலர் சமூக வலைதளங்கள ட்ரோல் செய்றாங்க. அப்பாவ சங்கினு சொன்னா எனக்கு கோவம் வரும். அவரு சங்கி இல்லை. சங்கியா இருந்தா லால் சலாம் படத்துல நடிச்சிருக்க மாட்டாரு” என்று கூறியிருந்தார்.
ஐஸ்வர்யாவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளானது. ரஜினியின் ஆன்மீக பயணத்தை குறிப்பிட்டு, இதெல்லாம் பட புரோமோஷன் என விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 29) படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஆந்திர மாநிலம் கடப்பா புறப்பட்டார்.
இதற்காக சென்னை விமான நிலையம் வந்த போது செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஆன்மீகவாதி, எல்லா மதங்களையும் விரும்புகிறவர். அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதுதான் அவருடைய பார்வை.
பட விளம்பரத்திற்காக எதுவும் இல்லை. லால் சலாம் படம் சூப்பரா வந்துருக்கு. படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள்” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!