நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் இன்று ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு முடிவடைந்து 2023 ஆம் ஆண்டு உற்சாகமாக பிறந்துள்ளது.
2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, தமிழகத்திலும் புத்தாண்டு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2023 ஆங்கில புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு , பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்து கூற சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜனவரி 1 ) சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்