அண்மையில் நடிகர் ராகவா லாரன்ஸ்,”தன் அறக்கட்டளைக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
இதனிடையே இவர் ஏன் இப்படி கூறுகிறார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்தது. இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் இது தொடர்பான விளக்கத்தை இன்று (ஆகஸ்ட் 29) தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் ஒரு ட்வீட் போட்டிருந்தேன். அதில் என்னுடைய ட்ரஸ்ட்டுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம். என்னுடைய குழந்தைகளை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு காரணம் என்னவென்றால் நான் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் போது குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய உதவிகளை செய்தேன். அப்போது என்னால் அவ்வளவு செய்ய முடியாது.
எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால் தான் மற்றவர்களிடம் உதவிகளை கேட்டேன். ஆனால் இப்போது நான் ஹீரோவாகி விட்டேன். முன்னால் 2 வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தேன். ஆனால் தற்போது வருடத்திற்கு 3 படங்கள் நடிக்கிறேன். நன்றாக பணம் வருகிறது. இப்போது எனக்குள்ளேயே ஒரு கேள்வி எழுகிறது. அது, ’உனக்கு நன்றாக பணம் வரும் போது நீ ஏன் மற்றவர்களிடம் பணம் வாங்கி உதவிகளைச் செய்ய வேண்டும்..’ நீயே செய்யலாமே என்பது.,
இதன் மூலம் ஆணவமாக பணத்தை வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. எனக்கு கொடுக்கிற பணத்தை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கஷ்டப்படுகிற குழந்தைகளுக்கு கொடுத்து உதவி செய்யுங்கள்.. உங்கள் வீட்டருகில் உள்ள ட்ரஸ்ட்டிற்கு உதவிகளை செய்யுங்கள். அவர்களுக்கு நிறைய பேர் கொடுக்கமாட்டார்கள். நான் எவ்வளவு சொன்னாலும், நான் உங்களுடன் சேர்ந்து உதவி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். அதைக்கேட்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. கஷ்டப்படுகிறவர்கள் யார் என்பதை நான் காட்டுகிறேன் அவர்களுக்கு நீங்கள் சென்று உதவி செய்யுங்கள். அதில் உங்களுக்கு மிகப்பெரிய சந்தோசம் கிடைக்கும்.” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!
‘டாடா’ வெற்றி: கவினுக்கு அடித்த ஜாக்பாட்!