காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக் சின்ஹா ஹீரோவாக நடிக்கும் ’கொடை’ படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ராதாரவி, கே.பாக்யராஜ், சீமான், கே.ராஜன், நடிகை தேவயானி, கருணாஸ், டி.சிவா
ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் ராதாரவி, கே.ராஜன், டி.சிவா இந்த மூவரைத் தவிர மற்றவர்கள் விழா முடியும் வரை வரவில்லை.
வேறொரு ஷூட்டிங்கின் பிரேக்கில் வந்திருந்ததால் விழாவின் ஆரம்பத்திலேயே பேச ஆரம்பித்தார் ராதாரவி.
பா.ஜ.க.வின் மேடையிலேயே பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அதிரடியாக விமர்சிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் இந்தியாவிலேயே ராதாரவிக்குத் தான் உண்டு.
அந்த டிசைனில் இந்த ’கொடை’ விழாவிலும் பொளந்து கட்டினார் ராதாரவி.
“சிங்கமுத்து என்னோட சொந்தக்காரர்ங்கிறதால இங்க வந்தேன். அவரு தேவமார், நான் தெலுங்கு பேசுற நாயுடு.
எப்படி சொந்தக்காரர்னு நினைக்காதீங்க. அது தான் சொந்தம்.
இனிமே பேசப் போற கே.ராஜன், எல்லா மேடையிலும் தமிழ் சினிமா நல்லாயிருக்கணும்னு கத்திக்கிட்டே இருக்காரு. ஆனா ஒண்ணும் நடக்காது.
வெற்றிகரமான 3—ஆவது நாள்னு என்னைக்கு விளம்பரம் கொடுக்க ஆரம்பிச்சானோ, அன்னைக்கே தமிழ் சினிமா அவுட்.
இந்த ஓடிடிகாரன் வந்த பிறகு எல்லாம் போச்சு. என்னோட மனசுல பட்டதையெல்லாம் சொல்லப் போக, அத இந்த யூடியூப் பசங்க ஏதாவாது பேசி பிரச்சனையக் கிளப்பிடுறாங்க.
ஹீரோவா அறிமுகமாகியிருக்கிற அண்ணன் சிங்கமுத்து மகன் பேரு தான் ஏதோ சின்ஹான்னு இருக்கு. மத்தபடி நம்ம தமிழ்ப் பையன் தான்.
இந்த மாதிரி இளைஞர்கள் நல்லா வரணும், ஏகப்பட்ட படங்கள்ல நடிக்கணும், தமிழ் சினிமாவும் நல்லா இருக்கணும்.
சினிமாவுலயும் அரசியல்லயும் வாரிசுகள் இருக்கணும், இருக்கத்தான் செய்யும். எங்கப்பன் பேரை நான் சொல்லாம வேற எவன் சொல்வான். என்ன ஒண்ணு என்னோட வீட்ல இருந்து உருப்படியா யாரும் சினிமாவுக்குள்ள வரல.
சரி அதவிடுங்க, இந்தக் ‘கொடை’ சிறக்க வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம், நான் கிளம்புறேன்” கைகூப்பியபடி ஷூட்டிங்கிற்கு கிளம்பினார் ராதாரவி.
வாரிசு அரசியலை ஒழிப்போம் என மோடி முழங்கிக் கொண்டிருக்க, மீண்டும் மோடி கருத்துக்கு மாறாகவே பேசியிருக்கிறார் ராதாரவி.
கவனம் ஈர்க்கும் த்ரிஷா ஐஸ்வர்யா ராய்: பொன்னியின் செல்வன் டீசர்!