நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்!

சினிமா

திரைப்பட இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் இன்று (ஜூலை 15)காலமானார். அவருக்கு வயது 70.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலை 8 மணியளவில் மரணமடைந்தார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பிரதாப் போத்தன் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குலத்திங்கள் போத்தன், பொன்னம்மா போத்தன் தம்பதிக்கு மகனாக பிறந்தார் பிரதாப் போத்தன். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் ‘அழியாத கோலங்கள்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இயக்குநராக அறிமுகமானது ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தில். நடிகை ராதிகாவுடன் திருமண உறவில் பிரிந்த பின்பு அமலா சத்யநாத்தை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இவரது மறைவுக்கு நடிகர் பிரித்விராஜ் உட்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரசிகர்களும் தங்களது வருத்தத்தினை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published.