ஷாருக்கான் நான்கு வருடங்களுக்கு பின் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் ‘பதான்’. இது, பாய்காட் பிரச்சாரத்தில் பலவீனமாகி போன இந்தி திரையுலகை எழுந்து நிற்கவைத்திருக்கிறது.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
அப்பாஸ் டயர்வாலா மற்றும் ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைத்துள்ள இந்தப் படத்திற்கு சஞ்சித் பால்ஹரா, அங்கீத் பால்ஹரா பின்னணி இசை அமைத்துள்ளனர்.
ஷாருக்கான் ‘ரா’ உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் தீபிகா படுகோனே முன்னாள் ஐஎஸ்ஐ ஏஜெண்டாக நடித்துள்ளார்.
ஜான் ஆப்ரஹாம் வில்லனாகவும், டிம்பிள் கபாடியா, அஷூதோஷ் ராணா, ஷாஜி சௌத்ரி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சல்மான் கான் கேமியோ ரோலில் வந்துள்ளார். உலகம் முழுவதும் ஜனவரி 25 அன்று வெளியான இந்தப் படம் இந்தி சினிமாவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் நேற்று அறிவித்தது
1. இந்தியாவில் இருந்து வெளியான இந்தி திரைப்படங்களில் உலக அளவில் அதிக திரைகளில்(8000) வெளியான திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
2. இதுவரை வெளியான இந்தி படங்களில், முதல்நாள் 106 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தபடம்.
3. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் தயாரிப்பில் இருந்து வெளியாகி, முதல் நாளில் 50 கோடி ரூபாய்க்கும் கூடுதலான வசூலைப் பெற்ற 3-வது படம் இதுவாகும். இதற்கு முன்னதாக இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ‘வார்’ திரைப்படம் முதல் நாளில் 53.35 கோடி ரூபாயும், ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ 52.25 கோடி ரூபாய்வசூல் செய்தபடங்களாகும்.
4. ஷாருக்கான் நாயகனாக நடித்து வெளியான படங்களிலேயே முதல் நாள் அதிக வசூல் செய்த படமாகும்.
5. நாயகிதீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் பதான் என யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிவித்துள்ள நிலையில்,
‘பதான்’ பட குழுவினருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் “ஹே பாய்காட் வெறியர்களே… உஷ்.. உஷ்.. உஷ்.. கிங் கானான ஷாருக்கான் மீண்டும் வந்துள்ளார். தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்..
# பேஷாரம் சங்” என்று சர்ச்சை பாடல் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.
இராமானுஜம்
சுவாமி சகஜாநந்தா: ஆரிய சூழ்ச்சியை அம்பலப்படுத்திய தலைவர்!
கட்டட இடிப்பில் மெத்தனம்: பறிபோன உயிர்!
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு ஆளுநர் கொடுத்த டீ… ஆவி பறக்கும் திமுக கூட்டணி!