தெகிடி பட நடிகர் பிரதீப் விஜயன் காலமானார்!

சினிமா

தெகிடி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிரதீப் விஜயன் இன்று (ஜூன் 13) காலமானார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதீப் நடித்து வந்தார். இவர் தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வட்டம், லிஃப்ட், டெடி, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.

சென்னை பாலவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார் பிரதீப். கடந்த இரண்டு நாட்களாக பிரதீப்பின் நண்பர்கள் அவரை தொடர்புகொண்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை. மேலும், அவரது வீடும் பூட்டிக்கிடந்துள்ளது

இதனால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள், காவல்துறை உதவியுடன் பிரதீப் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. மாரடைப்பால் பிரதீப் உயிரிழந்திருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பிரதீப் மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை.

உயிரிழந்த பிரதீப்பின் உடல் உடற்கூராய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. பிரதீப் மரணம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதீப்பின் மரணம் திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐஸ்கிரீமில் மனித விரல்… ஷாக்கான டாக்டர்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியா?: அன்புமணி பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *