பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப் : ரெட் கார்டின் பின்னணி என்ன?

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட நடிகர் பிரதீப் அந்தோனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த பிக்பாஸ் சீசனில் இதோடு இரண்டாவது முறையாக டபுள் எவிக்‌ஷன் நிகழ்ந்துள்ளது. கடந்த முறை யுகேந்திரன், வினுஷா இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர்.

இந்த வாரம் பட்டிமன்ற பேச்சாளரும், சின்னத்திரை பிரபலமுமான அன்னபாரதி குறைந்த வாக்குகள் பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இவர் வெளியேறிய நிகழ்ச்சி நாளை (நவம்பர் 5) ஒளிபரப்பாக இருக்கிறது. அதே நேரம் யாரும் எதிர்பாராதவிதமாக நடிகர் பிரதீப் ரெட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இது இன்று இரவு (நவம்பர் 4) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது. இதனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை 16 ஆக குறைந்துள்ளது.

மிகவும் வலிமையான போட்டியாளர் இறுதிவரை செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க தன்னுடைய சர்ச்சையான நடவடிக்கைகள், எல்லைமீறிய பேச்சுகள், சக போட்டியாளர்களிடம் சண்டைகள் போன்றவை காரணமாக நிகழ்ச்சியில் இருந்து 35 நாட்களுக்கு உள்ளாகவே பிரதீப் வெளியேறி இருக்கிறார்.

தற்போது வீட்டுக்குள் தினேஷ், கானா பாலா, விஜே அர்ச்சனா, ஆர்ஜே பிராவோ, விசித்ரா, பூர்ணிமா, விஷ்ணு, மாயா, ஐஷு, நிக்ஸன், கூல் சுரேஷ், மணிசந்திரா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

இதனால் போட்டிக்கு மேலும் சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக புதிய போட்டியாளர்களை வீட்டுக்கு உள்ளே பிக்பாஸ் அனுப்பி வைப்பாரா? இல்லை இதோட போதும் என்ற முடிவுக்கு வந்து விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – கே.எஸ்.அழகிரி

முதல்வர் ஸ்டாலினுக்கு என்னாச்சு?: வெளியான மருத்துவ அறிக்கை!

+1
5
+1
6
+1
5
+1
8
+1
11
+1
2
+1
10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *