பிரபுவுக்கு என்ன ஆச்சு?

நடிகர் பிரபு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திரைத்துறையில் 100க்கும் அதிகமான படங்களில் பிரபு நடித்து 80, 90ஸ் காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பிரபுவின் சிரிப்புக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் அவருக்கு உடல் நலக் குறைவு, குறிப்பாகச் சிறுநீரகத்தில் பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாகப் பிரபு சிகிச்சை பெறும் கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Actor Prabhu Admitted in Hospital

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் பிரபு பிப்ரவரி 20ஆம் தேதி இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, இன்று (நேற்று) காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.

அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய – பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: சிபிஐ (எம்) தீர்மானம்!

ஈரோடு கிழக்கு: இரவில் தொடங்கியது பணப்பட்டுவாடா!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts