தனது திருமணம் எப்போது நடந்தாலும், அது திருப்பதியிலேயே நடைபெறும் என்று ரசிகர்களுக்கு பிரபாஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பிரபாஸ் பாகுபலி படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
அதனைத்தொடர்ந்து அவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள ’ஆதிபுருஷ்’ படத்தில் ராமர் வேடத்தில் நடித்து இருக்கிறார் பிரபாஸ்.
அவருடன் சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான், அனுமன் வேடத்தில் தேவதத்தா ஆகியோரும் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இத்திரைப்படம் பான் இந்தியா படமாக வரும் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதனையடுத்து, திருப்பதியில் நடந்த படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பிரபாஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ஆதிபுருஷ் படத்தை சினிமா என்று சொல்லக்கூடாது. இது ராமாயணம். இந்த படத்தில் நடித்தது எனது அதிர்ஷ்டம்.
ராமர் அனைத்து மக்களின் இதயத்திலும் இருக்கிறார். அப்படிப்பட்ட மகானாக நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை கடவுளின் அருளாக நினைக்கிறேன்.
இந்தப் படம் குறித்து அறிவிப்பு வந்தபோது நடிகர் சிரஞ்சீவி, ’நீ ராமராக நடிக்கிறாயா?’ என்று கேட்டார். ’ஆமாம் சார்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ’அது உண்மையில் அதிர்ஷ்டம். அனைவருக்கும் கிடைக்காது. உனக்கு கிடைத்திருக்கிறது’ என்று சொல்லி பாராட்டினார்” என்றார்.
தொடர்ந்து திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். அதற்கு அவர், ”நான் எப்போது திருமணம் செய்து கொண்டாலும் திருப்பதியிலேயே செய்து கொள்வேன்” என்று சிரித்தபடி பிரபாஸ் பதில் அளித்தார்
கிறிஸ்டோபர் ஜெமா
கத்துக்குட்டி கிளப்பில் இணைந்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி
சென்னை கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்