நடிகர் பிரபாஸ் மீண்டும் காதலில் வீழ்ந்துள்ளதாகவும், பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உடன் டேட்டிங் செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை அமைத்துக் கொண்டார். இதனால் பிரபாஸின் நடிப்பில் வெளியாகும் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது நடிகர் பிரபாஸ் பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாகப் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்து வருகிறார்.
ராமாயண இதிகாசத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் தயாராகி வருகின்றது.

திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சனோன் உடன் நடிகர் பிரபாஸ் டேட்டிங் செய்வதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்குக் காரணம், கரண் ஜோகரின் காஃபி வித் கரண் சீசன் 7 சமீபத்திய எபிசோடில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சனோனுக்கு நிகழ்ச்சியின் இடையே நடிகர் பிரபாஸ் போன் செய்து பேசியது தான்.

இதற்கு முன்பு பாகுபலி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது அந்த படத்தில் நாயகியான தேவசேனா பாத்திரத்தில் நடித்த நடிகை அனுஷ்கா மற்றும் பிரபாஸ் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இருவரும் தங்களுக்கு இடையில் காதல் இல்லை என்றும் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் தெரிவித்திருந்தனர்.
இப்போது புதிய தேவசேனாவை தேடிக் கொண்டிருக்கிறார் பாகுபலி.
மோனிஷா
மக்களின் சினிமா பார்வை மாறிவிட்டது: மாதவன்