Actor Parthiban Tweet

GVM-ஐ கலாய்த்த பார்த்திபன்.. வைரலாகும் ட்விட்…!

சினிமா

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் பாடல்களும் டீசர்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் விக்ரமுடன் நடிகர் பார்த்திபன், நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் விநாயகன், நடிகர் வம்சி, தொகுப்பாளினி டிடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படம் குறித்து பேசிய கௌதம் மேனன் இந்த படம் மூலமாக ஒரு தனி யுனிவர்ஸை உருவாக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் துருவ நட்சத்திரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பாகத்திற்கான லீட் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் தனது வழக்கமான பாணியில் இயக்குனர் கௌதம் மேனன் குறித்த  ஓர் பதிவை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த பதிவில்,  காலையில் ஒரு கப் தேனீர் கூடவே ஒரு ஸ்கிரிப்ட்(நடிக்கவோ/இயக்கவோ)
மூழ்கிவிட போதுமெனக்கு.

‘துருவி நட்சத்திரம்’ படபிடிப்பில் GVMமுடன். ‘வ’  ‘வி’ ஆனது விபத்து அல்ல. துருவித் துருவி ஒவ்வொரு வார்த்தையாக “so of all the peopleU will break the law sir?”என நான் பேசியதில் Break என்ற வார்த்தை bake என கேட்பதாகக் கூறி 100 வது நாளாக டப்பிங். சிரத்தையுடன் சிரமத்துடன் சிறப்பாக வந்துவிட முயலும் gvmமின் படம் release ஆக gvmமும் விரைவில் relieve ஆக விருப்பம்!” என்று நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

பல வருடங்களாக துருவ நட்சத்திரம் படத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கும் கௌதம் மேனன் Relieve ஆக தாங்களும் விரும்புகிறோம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

– கார்த்திக் ராஜா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

விஜய் சேதுபதிக்கு “வில்லன்” ஜெயராம்: மிஷ்கின் பட அப்டேட்!

ஜெய் ஸ்ரீராம் விவகாரம்: உதயநிதிக்கு அண்ணாமலை பதிலடி!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *