புதுச்சேரியில் நடிகர் பார்த்திபன், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. actor parthiban about periyar
இந்த கேள்விக்கு பார்த்திபன் பதில் கூறுகையில், “நண்பர் சீமான் இயக்குநர் என்பதை எல்லாம் தாண்டி மிகப்பெரிய அரசியல்வாதியாக மாறியுள்ளார். அரசியலில் அவரது பார்வை வேறு விதமாக இருக்கலாம். பெரியாரை ஏன் சிறியார் ஆக்கவேண்டும் என்பதற்கு சீமானிடத்தில் சில காரணங்கள் கூட இருக்கலாம்.
இதில் நாம் சாம்பிராணி போட்டு போட்டு புகைச்சலை அதிகமாக்குவதை தவிர்க்க வேண்டும். சீமான் பேச்சை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே நல்லது. இன்றைக்கு, சீமான் அரசியல் செய்வதற்கும் பெரியார் தேவைப்படுகிறார் அல்லவா? அதான் அவர் எவ்வளவு பெரியார்” என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார். பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
பெரியார் ஆதரவாளர்களால் சீமான் வீடும் முற்றுகையிடப்பட்டது. ஆனாலும், சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி விமர்சித்து பேசுவதை நிறுத்தி விடவில்லை. ஏராளமான வழக்குகள் தொடர்ந்தாலும் சீமானின் வாயை அடைக்க முடியவில்லை.