மலையாள நடிகர் மோகன்லாலை மயால்ஜியா என்ற நோய் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நடிகர் மோகன்லால் எம்பூரன் என்ற புதிய படத்தின் படபிடிப்பில் இருந்த போது, அதிகப்படியான காய்ச்சல் காரணமாக கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது , 64 வயதான அவருக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. மோகன்லாலை மயால்ஜியா என்ற நோய் தாக்கியுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக 5 நாட்களுக்கு முற்றிலும் அவரை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுரை வழங்கியுள்ளனர். டாக்டர்கள் அறிக்கையில் மயால்ஜியா என்ற விசித்திர வார்த்தை இடம் பெற்றிருந்ததால், அது என்ன நோய் என மோகன்லாலின் ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.
இந்த மயால்ஜியா நோய் தாக்கினால் தசைகள், தசை நார் பகுதிகளில் அதிகப்படியான வலி ஏற்படும். இந்த வலி தசை திசுக்களில் இருந்து உருவாகும். ஒரு தசை பகுதியில் அதிக பயன்பாடு காரணமாகவும் இந்த நோய் ஏற்படலாம். மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை, காயம் , தடுப்பூசி போடுவதால் மயால்ஜியா தாக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இந்த நோய் தாக்கினால் பரவலாக உடல் முழுவதும் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும். நன்றாக ஓய்வு எடுப்பது, மசாஜ் செய்வது , ஸ்ட்ரெஸ்ஸை குறைப்பது, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதால், இந்த நோய் தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, மோகன்லாலில் ரசிகர்கள் கெட்வெல் லாலேட்டா என்று வாழ்த்தி கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை காண நடிகர் மோகன்லால் சென்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“கலைஞரின் தொலைநோக்கு பார்வையால் தமிழ்நாடு முன்னோடி மாநிலமானது”… ராகுல் புகழாரம்!
ஆவணி மாத நட்சத்திர பலன் – ரேவதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)