மோகன்லால் படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தடை!

Published On:

| By Prakash

மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள கிரைம் திரில்லர் படம் மான்ஸ்டர். ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இப்படத்தில் லட்சுமி மஞ்சு, சுதேவ் நாயர், லீனா, சித்திக், கணேஷ் குமார் மற்றும் ஹனி ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
உதயகிருஷ்ணா திரைக்கதை வசனத்தில் வைசாக் படத்தை இயக்கியுள்ளார்.

தீபக் தேவ் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் வளைகுடா நாடுகளில் படத்தை வெளியிட வளைகுடா நாடுகளுக்கான தணிக்கை அமைப்பு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என்பதால், தேவையான மாற்றங்களை செய்து படத்தை தணிக்கை குழுவிடம் மீண்டும் சமர்ப்பிக்க, படக்குழுவினர் மறுதணிக்கைக்கு விண்ணப்பிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்
ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பான மான்ஸ்டர், மோகன்லால் நடித்த ஆறாட்டு படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியாகும் இரண்டாவது படமாகும்.

கேரள மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மான்ஸ்டர் படத்திற்கு முன்பதிவு டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு கேரள மாநிலம் முழுவதும் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகியுள்ளது.
கேரள மக்கள் அதிகமாக பணிபுரியும் வளைகுடா நாடுகளில் மலையாள படங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பிரதானமானது மட்டுமல்ல, அதிகபட்சமானதும் ஆகும்.

இந்த நிலையில் மான்ஸ்டர் படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தணிக்கை குழு அனுமதி மறுத்திருப்பது தயாரிப்பாளர் தரப்புக்கு மட்டுமின்றி வளைகுடா நாடுகளில் வசித்துவரும் மோகன்லால் ரசிகர்களுக்கும், மலையாளிகளுக்கும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இராமானுஜம்

சொத்து விவகாரம்: சிவாஜி மகள்களின் மனுக்கள் தள்ளுபடி!

சமந்தாவின் ‘யசோதா’ : ரிலீஸ் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share