நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில் இன்று (செப்டம்பர் 9) தகனம் செய்யப்பட்டது.
தனது தனித்துமான நடிப்பால் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடம் பிடித்தவர் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.
நேற்று காலை மாரிமுத்து நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாரிமுத்துவின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது. அங்கு திரைபிரபலங்கள் பலரும் வந்து மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலை 5.45 மணியளவில் மாரிமுத்துவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மலர்களால் அலங்கரீக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
செல்வம்
ஜி20 மாநாடு விருந்து: டெல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
”எந்த ஜனநாயக நாட்டிலும் இது நடக்காது”: மோடிக்கு ப.சிதம்பரம் கண்டனம்!