மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பின்னர் தனது நடிப்பாற்றலால் அனைவராலும் கவனிக்கப்பட்டவர் நடிகர் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து அனைத்து குடும்பங்களுக்கும் நெருக்கமானார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்திலும் மாரிமுத்து நடித்திருந்தார்.
தனது நடிப்பாற்றலால் அனைவராலும் பாராட்டைப்பெற்று வந்த மாரிமுத்து இன்று காலை நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
திரைபிரபலங்கள், அரசியல் கட்சியினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாலை 5.45 மணியளவில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. நாளை காலை 10.30 மணிக்கு மாரிமுத்து உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
செல்வம்
சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் மாரிமுத்து உடல்!
“எழுந்திருங்க பெரியப்பா” : மாரிமுத்துவை பார்த்து கதறி அழுத தாரா