நடிகர், இயக்குநர் மனோபாலா காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா இன்று (மே 3) உடல் நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் இயக்குநராகவும் இருந்தவர் மனோபாலா (69). பல்வேறு வெற்றி படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துப் பிரபலமானவர்.

இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக இருந்த மனோபாலா ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். ரஜினிகாந்த் நடித்த ஊர்காவலன் படத்தையும் மனோபாலா இயக்கியிருந்தார்.

அப்போலோ மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த மனோபாலா 15 நாட்களாக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் இன்று (மே 3) காலமானார்.

இவரது மரணத்திற்குத் தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோனிஷா

ஓட்டுநர்கள் பற்றாக்குறை… நடத்துநர்களுக்குப் பணி மறுப்பதா? அன்புமணி ராமதாஸ்

’தி கேரளா ஸ்டோரி’: தமிழக அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts